இன்றைய ராசி பலன் 22-05-2018

0
771
Today horoscope 22-05-2018

(Today horoscope 22-05-2018 )

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 8ம் தேதி, ரம்ஜான் 6ம் தேதி,
22.5.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 12:14 வரை;
அதன் பின் நவமி திதி, மகம் நட்சத்திரம் இரவு 11:58 மணி வரை;
அதன் பின் பூரம் நட்சத்திரம், சித்த யோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : துர்க்கை வழிபாடு. .

மேஷ ராசி நேயர்களே !
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே !
எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம் ராசி நேயர்களே !
வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

கடக ராசி நேயர்களே !
முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெணகள் குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்ம ராசி நேயர்களே !
இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.

கன்னி ராசி நேயர்களே !
பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வங்கிநிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு.

துலாம் ராசி நேயர்களே !
அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்

தனுசு ராசி நேயர்களே !
மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.வாகனப் பயணத்தில் மித வேகம் நல்லது.

மகர ராசி நேயர்களே !
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் பணம், நகை இரவல் கொடுப்பது கூடாது. நண்பரால் உதவி உண்டு.

கும்பம் ராசி நேயர்களே !
சிறிய வேலைக்கும் விடா முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும்.

மீனம் ராசி நேயர்களே !
எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today horoscope 22-05-2018