வாய்க்கு ருசியான இறால் கறி..

0
449
tasty prawn curry

(tasty prawn curry )

கேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி  எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்!

இறால் – 300 கிராம், மாங்காய் – 1

இஞ்சி – 1

பச்சை மிளகாய் – 5

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி.

கிரேவி செய்ய!

தேங்காய் – 1

மிளகாய்தூள்  தேவையான அளவு

மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

வெந்தயத்தூள் – அரை தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 50 கிராம்

கறிவேப்பிலை  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும் . மாங்காயை  துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.  தேங்காயை  துருவிக்கொள்ளவும்,  இஞ்சி ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கிரேவிக்கு  கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

அடுத்ததாக , ஒரு பாத்திரத்தில்  இறாலை போட்டு அதனுடன் மாங்காய்,  இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில்   மூடிவைத்து  சிறிது வேக விடவும்.

இறால் வெந்ததும், அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும்.  அதோடு  கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.

இப்போது சுவையான , ருசித்து உண்ண கூடிய இறால் கறி தயார். (ஆப்பம், இட்லி, தோசை, சாப்பாடு என அனைத்து சாப்பாட்டிற்கும் இந்த சுவையான இறால் கறி அருமையாக இருக்கும்.)

tags:-tasty prawn curry
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

சோதனை நிலையத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் !!