பிரான்ஸில் ரயில்வே வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

0
415
French people majority againstt rail strike

பெரும்பான்மை பிரெஞ்சு மக்கள் நடந்துகொண்டிருக்கும் இரயில் வேலை நிறுத்தங்கள் ‘நியாயமற்றது என தெரிவிப்பதாக ஆய்வொன்று கூறுகிறது. இவ் ஆய்வின்படி, 42% ஆனவர்களே இரயில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் முன்னைய ஆய்வுகளில் பெருந்தொகையானோர் ரயில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். French people majority againstt rail strike

அதிக போட்டித்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு எதிராக SNCF ரயில் தொழிலாளர்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் ஒரு பகுதியினர் ஏற்கனவே மக்ரோனின் சீர்திருத்தங்களிற்கு ஆதரவு தெரிவித்தனர். இது தவிர, இந்த மாதத்தின் கடைசியில் அவர்கள் செனட்டில் இது தொடர்பான வாதத்திற்கு வாக்களிக்க வேண்டும்,

மேலும், இந்த வார புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**