(tamilnews northern province flag half piller sivajilingam)
வடமாகாண சபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதற்காக நடவடிக்கை எடுக்க முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எடுக்கட்டும் பார்க்கலாம் என சிவாஜிலிங்கம் சவால்விடுத்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இந்த சவாலை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வடமாகாண சபையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியிருந்தார்.
இது தொடர்பாக வினவிய போதே சிவாஜிலிங்கம் குறித்த பதிலை அளித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வடமாகாண சபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை.
அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். அதேபோல் மாகாண பாடசாலைகளில் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும் கேட்டோம்.
அதுவும் எங்களின் பிரச்சினை அது தெரியாமல் கருத்து கூறும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் நான் கேட்கிறேன் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
(tamilnews northern province flag half piller sivajilingam)
More Tamil News
- மலையகத்தில் வெள்ளத்தில் வீடுகள்; மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம்
- இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை
- பயங்கரமான காட்டுக்குள் இரண்டு நாட்கள் தியானம் செய்த முஸ்லிம் பிரஜை
- 4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது
- நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு – 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்