ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அமைச்சர் திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

0
616
tamilnews minister thigambaram warning president &prime minister

(tamilnews minister thigambaram warning president &prime minister)

நல்லாட்சி எனப்படும் தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாகவிருந்து எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்கு மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யத் தவறினால் 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியும் பிரச்சினையை எதிர்நோக்குவார், பிரதமரும் பிரச்சினைக்கு உள்ளாவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் என்பதனால் யாருமே பயன்பெற முடியாமல் போய்விடும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டன் பூல்பேங்க் தோட்டத்தில் இடம்பெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 தனி வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இந்தநிகழ்வில், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ.ஸ்ரீதரன் சரஸ்வதி சிவகுரு, மனித வள அபிவிருத்தி நிறுவனத் தலைவர் வீ.புத்திரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட பிரதேச சபை உறுபினர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து உரையாற்றுகையில், 2015 ஆம் ஆண்டு நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மலையகத்தில் லயன் வீட்டுத்திட்டத்தை ஒழித்து நவீன வசதிகளுடன் கிராமங்களையும் தனி வீடுகளையும் அமைக்க வேண்டும் என்று தனது வேலைத் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 6000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவை அரசியல் தொழிற்சங்க பேதம் இன்றி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்தும் என்னை விமர்சனம் செய்வதையே சிலர் பொழுது போக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

நான் அரசியலில் செய்து காட்டுவதை அவர்கள் செய்யத் தவறி விட்டார்களே என்ற பொறாமை தான் காரணம் ஆகும்.

நான் எனது அரசியல் பயணத்தில் மக்களை ஏமாற்ற மாட்டேன்.

மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க என்னால் முடிந்த சேவைகளை செய்து வருகிறேன் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எமது மக்களுக்கு காணி, தனி வீடு, அவற்றுக்கான உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்து உரிமை பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாரும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை இருந்ததால் சிலர் ஆட்சி அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

இந்தத் தேர்தல் முறையில் எமக்கு உடன்பாடில்லை. காரணம் வென்றவர்கள் வெளியில் நிற்கின்றார்கள்.

தோற்றவர்கள் உள்ளே இருகின்றார்கள். மலையக அரசியலில் புலி வருகுது, புலி வருகுது என்ற கதையாக இருக்கின்றது.

இன்று அமைச்சுப் பதவி கிடைக்கும், நாளை அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது.

மலையக மக்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது. அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்ய யாரும் நினைத்தால் மக்களைக் காப்பாற்ற நான் இருக்கின்றேன்.

எனவே மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு விடயத்தில் இம்முறையும் ஏமாற்றப்படுவார்கள்.

கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் நிச்சயம் மக்களை ஏமாற்றுவார்கள்.

இன்று தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகின்றது. தோட்டங்களுக்கு நல்ல இலாபமும் கிடைத்து வருகின்றது.

எனவே, நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக கம்பனிகளுக்கு எதிராகப் போராடி நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பேன்.

மே தினக் கூட்டத்தில் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து தமது ஒற்றுமையை எடுத்துக் காட்டியது போல சம்பளப் போராட்டத்திலும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

இன்றைய தேசிய அரசாங்கம் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும் இந்த இடைப்பட்ட காலப்பகுதில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு உரிய முறையில் சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லா விட்டால் 2020 இல் ஜனாதிபதியும் பிரச்சினைகளை எதிர்கொள்வார். பிரதமரும் பிரச்சினைகளை சந்திப்பார்.

அதேநேரம் அமைச்சர்களும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் யாரும் பயன் பெற முடியாமற் போய்விடும்.

எனவே, இன்னும் ஒன்றரை வருடத்துக்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக இருந்து நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டார்.

(tamilnews minister thigambaram warning president &prime minister)

More Tamil News

Tamil News Group websites :