(extreme weather 9 dead)
15 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக இதுவரை 8 பேர் பலியாகினர்.
இடிமின்னல் தாக்கம், மண்மேடு சரிவு, நீரில் மூழ்கி மற்றும் மர முறிவு காரணமாகவே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரையில் 9 ஆயிரத்து 815 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 40 பேர் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழையுடன் வீசிய காற்றின் காரணமாக, 19 வீடுகள் முழுமையாகவும், 918 வீடுகள் பகுதி அளவிலும் சேதடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் தயாராகவுள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் கடற்படைக்கு சொந்தமான படகுகள் களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக சில சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட நேரிட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, நிவித்திகல, மற்றும் தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட சகல பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 15 மாவட்டங்களில் அனர்த்தம் : 8 பேர் பலி : 38 ஆயிரம் பேர் பாதிப்பு
- மர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு
- தாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:extreme weather 9 dead,extreme weather 9 dead,