திரில் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை

0
658

(chennai super kings vs sunrisers hyderabad qualifier 1 news Tamil)

ஐ.பி.எல் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான முதலாவது குவாலிபையர் போட்டி மும்பையில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக கார்லோஸ் பிராத்வைட் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும், வில்லியம்ஸன் 15 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ரெய்னா 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வொட்சன் மற்றும் ராயுடு ஓட்டங்கள் இன்றியும், டோனி 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பிராவோ 7 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய  டு பிளசிஸ் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஹைதராபாத் அணி சார்பில் ரஷீட் கான் 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் கௌல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி இந்த போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றுள்ளதுடன், ஹைதராபாத் அணி நாளை நடைபெறும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குவாலிபையர் 2 போட்டியில் மோத வேண்டும்.

<<Tamil News Group websites>>

chennai super kings vs sunrisers hyderabad qualifier 1 news Tamil