பிரான்ஸில், வீட்டுக்கு சென்று மோசமாக தாக்கிய எதிரி!

0
533
Person attacked man badly France Rue Claude-Monet

கத்தியால் மோசமாக தாக்கப்படட நபர் Bichat மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். Person attacked man badly France Rue Claude-Monet

நேற்று(மே 21) அதிகாலை, Rue Claude-Monet (Saint-Ouen) உள்ள அவரது வீட்டில் வைத்தே அவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், வீட்டுக்குள் இருவரும் நீண்ட நேரம் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

தாக்குதல்தாரியை சம்பவத்துக்கு சிலமணி நேரம் முன்பாக கார்-து-நோர் நிலையத்தில் வைத்து சந்தித்துவிட்டு, வீட்டுக்கும் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்கு வந்த குறித்த நபர், திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், குறித்த நபரினை கத்தியால் மோசமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். மார்பு மற்றும் கைகளில் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது தவிர, தப்பியோடிய தாக்குதல்தாரியை காவல்துறையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**