மண்சரிவு அபாயம் ; 105 குடும்பங்கள் வெளியேற்றம்

0
798
Landslide risk 105 families evacuated Kottamalai Plantation

(Landslide risk 105 families evacuated Kottamalai Plantation)
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் சீரற்ற காலநிலை காரணமாக 08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ள அதேவேளை, வெள்ள அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொத்மலை வெதமுல்லை தோட்டம் லில்லிஸ்டாண்ட் பிரிவில் மண் சரிவு அபாயம் காரணமாக 105 குடும்பங்களைச் சேர்ந்த 340 பேர் குறித்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக இறம்பொடை இந்துக் கல்லூரியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இவர்களுக்கான முதற்கட்ட நிவாரணங்ளை கிராம சேவகர் ஊடாக கொத்மலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

இவர்களுடன் தோட்டப் பொது மக்கள், தோட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள், நலன்விரும்பிகளும் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Landslide risk 105 families evacuated Kottamalai Plantation