Gold Coast Refugee Claim
Gold Coast இல் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 8,103 பேர் அவுஸ்திரேலியா வந்ததாகவும் இவர்களில் 7,848 பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செனற் விசாரணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்த 200 பேர் தற்போது ‘Bridging’ விசாவில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு விசாவுக்கே விண்ணப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை அவுஸ்திரேலியர்கள் பலர் இவர்களது நடவடிக்கைகளால் வெறுப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அகதி அந்தஸ்து கோரியுள்ள சிலர் சமூகவலைதளங்களில் பதிவேற்றும் படங்கள், நிலைத்தகவல்கள் ஆகியவற்றின் காரணமாகவே பலர் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.