போராட்டம் எதிரொலி – ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு!

0
792
Echo struggle - 144 banned order around Sterlite plant

Echo struggle – 144 banned order around Sterlite plant

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆலையை சுற்றி உள்ள 21 கிராம மக்கள் கடந்த 3 மாதமாகப் போராட்டம் நடத்த வருகின்றனர்,

இந்நிலையில் மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ள நிலையில் போராட்டங்கள் எதிரொலியாக தூத்துக்குடி மற்றும் சிப்காட் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளார்,

மேலும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :