Telstra coming back
நாடு முழுவதும் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டிருந்த Telstra கைபேசி இணைப்புக்கள் தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான Telstra வாடிக்கையாளர்கள் கைபேசியூடான இணையப் பாவனை மற்றும் அழைப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ள Telstra நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Mark Wright இத்தொழிநுட்ப கோளாறு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.