காலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..?

0
1625
Wake morning drink water little, water, tamilhealth news, health news, thanneerin nanmaigal,

{ Wake morning drink water little }

இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும்.

அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். முதல் கட்ட வேலையாக காலையில் எழுந்ததில் இருந்து உங்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் விடையங்களை செய்யுங்கள். முதலில் காலையில் தூங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள்.

இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள்….

*வளர்ச்சி மாற்றம்

ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் உடலில் வளர்ச்சி மாற்றம் 24% அதிகம் ஒன்றரை மணிநேரத்தில் அதிகரிக்கிறது.

*நச்சுக்கள்

உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத்த உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.

*பசியை குறைக்கும்

தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.

*நோய் எதிர்ப்பு சக்தி

நீங்கள் சரியாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. மேலும், இது நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் வலுவடைய செய்கின்றது.

*ஆரோக்கியமான சருமம்

நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

*குடல் இயக்கம்

ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உண்டாகும். காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு மாதம் வரையில் தொடர்ந்து தூங்கி எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன அற்புதங்கள் உண்டாகின்றன என்பதை நீங்கள் உணர முடியும்!

Tags: Wake morning drink water little

<< RELATED HEALTH NEWS >>

*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!

*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!

*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com/