(Saudi Police Arrested 7 Women Breached Driving Ban)
சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
சவூதி பெண்கள் காரோட்ட இருந்து வந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார்.
வருகிற ஜூன் மாதம் 24-ந் திகதி முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அமுலுக்கு வருகின்றது.
இந்நிலையில், சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக மாதர் நல ஆர்வலர்களான 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே இவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டு 75 நாட்கள் சிறையில் இருந்தவர்கள்.
பெண்கள் கார் ஓட்ட தடையை நீக்க கோரி போராடியவர்கள் அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பே தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)