ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!

0
244
Passengers traveling rails due train disruption

(Passengers traveling rails due train disruption)

சிங்கப்பூரில் ஃபீனிக்ஸ், புக்கிட் பாஞ்சாங்  இலகு ரயில் நிலையங்கள் இடையே ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் பயணிகள் பலர் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்துசெல்ல நேரிட்டுள்ளது.

இந்த ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தடைபட்டது,
மதியம் 2.20மணி அளவில் ரயில் சேவையில் ஏற்பட்ட தடை குறித்து SMRT தனது Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து ரயில் சேவை A மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாகவும்,  ரயில் சேவை B-யை இயல்புநிலைக்குக் கொண்டுவரப் பொறியாளர்கள் முயன்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் , ரயிலில் குளிர் சாதனம்(AC) வேலை செய்யாததால் புழுக்கமாய் இருந்ததாகப் பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

tags:-Passengers traveling rails due train disruption

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**