16 பேரும் மஹிந்தவை சந்திக்கின்றனர்..! : குழப்பத்தில் மைத்திரி அணி

0
569
16 slfp members meet mahinda

(16 slfp members meet mahinda)
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை மறுதினம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ள, இவர்கள், பொது திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்து மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அந்த அணியைச் சேர்ந்தவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு விலகுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிழல் தலைவராகவும் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுடன், இரண்டு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கூட்டு எதிரணியில் உள்ள தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களையும் தாம் சந்தித்துப் பேசவிருப்பதாகவும், தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :