பாசிச எதிர்ப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது – கமல்ஹாசன்!

0
680
KamalHassan meet kerala chief minister

கேரளா மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்த கமல்ஹாசன் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார், சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கர்நாடகா விவகாரம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.  KamalHassan meet kerala chief minister

இந்த சந்திப்பிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், கோவையில் அடுத்த மாதம் மக்கள் நீதி மையம் சார்பில் நடக்கும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறினார், அவர் வரும் தேதிக்கு ஏற்ப நிகழ்ச்சிக்கான திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்தார்,

கர்நாடக விவரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த கமலஹாசன், கர்நாடகத்தில் தொடங்கி இருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என நான் ஏற்கனவே டிவிட்டரில் எழுதி இருந்தேன், பாசிஸ்ட்டுகளாக மாறி வருபவர்களை எப்படி எதிர்கொள்வது என மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது என்றார்.

More Tamil News

Tamil News Group websites :