முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்

0
668
mullivaikkal remembrance day sinhala peoples upset

(mullivaikkal remembrance day sinhala peoples upset)
வட­மா­காண முத­ல­மைச்சர் தலை­மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் தென்­னி­லங்­கையில் உள்ள மக்கள் விச­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ள­தோடு குழப்ப நிலையை அடைந்­தி­ருக்­கி­றார்கள். இந்த நட­வ­டிக்கை இரா­ணுத்­தி­ன­ருக்கோ பாது­காப்பு படை­யி­ன­ருக்கோ சிங்­கள மக்­க­ளுக்கோ பல தவ­றான எண்­ணப்­பா­டு­களை விதைக்­கின்ற செய­லா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை நாம் காண்­கின்றோம் என்று உயர் கல்வி மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­பக்ஷ குற்றம் சாட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இறுதி யுத்­தத்தின் போது முள்­ளி­வாய்க்­காலில் மூன்று இலட்­சத்­திற்கு மேற்­பட்ட உயிர்­களை பலிக்­க­டாக்­க­ளாக வைத்­துக்­கொண்டு பிர­பா­கரன் யுத்­தத்தை நடாத்­தி­யி­ருந்தார்.

ஒரு­கா­லத்தில் வட­பு­லத்தில் வாழ்ந்த சிங்­கள, முஸ்லீம் மக்கள் 24 மணித்­தி­யா­லத்­திற்குள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.இன்­றைய நிலையில் இப்­பி­ர­தே­சத்­திலே வாழ்ந்து வரும் தமிழ்,சிங்­கள,முஸ்லீம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்­கின்­றார்கள் என்றால் அதற்கு முப்­ப­டை­யி­னரே காரணம் என்­பதை யாவரும் அறிவர்.

இரா­ணுவம் அகற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதே விக்­கி­னேஸ்­வ­ரனின் பிரச்­னை­யாக உள்­ளது. இரா­ணு­வத்தை பொறுத்­த­மட்டில் அந்த பிர­தேச மக்­க­ளோடு நல்­லு­ணர்வை பேணு­வ­துடன் அவர்­க­ளுக்­கான பாது­காப்­பையும் வழங்கி வரு­கி­றார்கள். இறுதி போரில் கூட 3 இலட்சம் மக்­களை முப்­ப­டை­யினர் பாது­காப்­பாக மீட்­டி­ருந்­தனர் அத­னாலே இன்று சமா­தானம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.ஆனால் அந்த கால­கட்­டத்தில் தென்­ப­கு­தியில் இருந்த விக்­கி­னேஸ்­வரன் அங்­கி­ருந்­த­வர்­க­ளுடன் நல்லுறவை பேணிக்கொண்டிருந்தார். யுத்த பிரதேசத்தில் காலடி எடுத்து கூட வைக்கவில்லை. அப்பாவி மக்களுக்காக ஒரு வசனம் கூட பேசவில்லை.எனவே முதலமைச்சர் அவர்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும் அல்லாது விடில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன் பிரபாகரன் பிறந்த தினத்தை இங்கு கொண்டாடினால் சிங்கள மக்கள் அவரின் மரண தினத்தை தென்பகுதியில் கொண்டாடும் நிலையும் இருக்கிறது. பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடினால் தென்பகுதியில். விஜயவீரவின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் அந்த மக்களும் அனுஸ்டிக்கவேண்டும் அல்லவா. அவ்வாறு இருக்கும் போது நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டமைப்பது.

வடக்கிற்கு மாகாணசபை மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். ஆனால் எதையுமே செய்யாத நிலைமை எதிர்காலத்தில் அந்த மக்கள் இன்னும் பல பிரச்னைகளிற்கு முகம்கொடுக்கும் நிலமையையே ஏற்படுத்தும் என்று கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :