பிரான்ஸில் பலசரக்குக்கடையில் நடந்த கொலை!

0
574
41 year old man kill France Romainville grocery shop

நேற்று Romainville நகரிலுள்ள பலசரக்குக்கடை ஒன்றுக்குள் வைத்து நபர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதுடன் குறித்த நபர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பத்து பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 41 year old man kill France Romainville grocery shop

நேற்று நள்ளிரவில் செந்தனியில் உள்ள Romainville நகரில் குறித்த 41 வயதான நபர் அவருடைய நண்பர் ஒருவரின் கடையில் நின்றிருந்தபோதே கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.

திடீரென குறித்த கடைக்குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட சில நபர்கள் குறித்த நபரை மோசமாக தாக்கியுள்ளனர். குறித்த நபரின் இதயப்பகுதியில் கத்தியால் மிக ஆழமாக குத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக, Romainville நகரினுள் பத்து பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொபினி அரச வழக்கறிஞர் அலுவகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**