மர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

0
1765
missing chinese found 9 days later

(missing chinese found 9 days later)
மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையின் பணிக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன பிரஜை ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தியகொட பிரதேசத்தில் காணாமல் போயிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் குறித்த சீன பிரஜை 9 நாட்களுக்குப்பின் தன்தெனிய பிரதேசத்தில் உள்ள காட்டிலுள்ள குழியொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக திஹாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டில் உள்ள காணி ஒன்றை துப்பரவு செய்ய தமது தந்தையுடன் சென்றிருந்த இரண்டு பிள்ளைகள், குழியில் விழுந்து கிடந்த சீனப் பிரஜையின் சத்தத்தை கேட்டு விடயம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் சீனப் பிரஜைக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற திஹாகொட பொலிஸார் சீனப் பிரஜையை மீட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் தங்கியிருந்த வேலைத்தளத்தில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

அதன் பின்னர் அவருடைய தொலைபேசி, பாதணி, சட்டை ஆகியவை திஹாகொட ஆரணிய ஆற்றுக்கு அருகில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாத்தறை திஹாகொட பொலிஸாரும், இராணுவத்தினரும், பொது மக்கள் பலரும் தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

9 நாட்களுக்குபின் நேற்று மாலை பாதுகாக்கப்பட்ட வனாந்தரம் ஒன்றில் உள்ள குழி ஒன்றினுள் இருந்து குறித்த நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது இவரை காப்பாற்றும் பணியில் மாத்தறை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை 9 நாட்கள் குறித்த சீனபிரஜை எந்தவிதமான உணவும் இன்றி குழிக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :