வட கடற்பரப்பில் தீவிர தேடுதல் ரோந்து நடவடிக்கை தொடரும் – கடற்படை எச்சரிக்கை

0
379
navy continue search north ocean stop drug transport warning

navy continue search north ocean stop drug transport warning
வடக்கு கடற்பரப்பில் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கடற்பிரதேசத்தின் ஊடாக இலங்கைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழ் நியுஸ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கைகள் மூலம் பல போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களிலும் அந்த பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
navy continue search north ocean stop drug transport warning

More Tamil News

Tamil News Group websites :