விக்கினேஷ்வரன் உள்ளிட்ட அனைவரும் பதவி மோகம் கொண்டவர்கள் – சாடுகிறார் விஜயதாச ராஜபக்ஷ

0
571
northern province chief minister include all embers waste wijayadasa

northern province chief minister include all embers waste wijayadasa
வட மாகாண மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக வட மாகாண சபை அர்ப்பணிப்புடன் செயலாற்ற தவறியுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வட மாகாண சபை அதிக கவனம் செலுத்துவதை தாம் ஒரு போதும் அவதானித்ததில்லை.

தமது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் முரண்படுகின்றார்களே தவிர மாகாண மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காணமுடியவில்லை.

போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பனவற்றின் பயன்பாடு பரவி வருவதால் வடக்கு இளைஞர் யுவதிகளின் வாழ்வு அபாயமான நிலைக்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் பிரதேத்தில் உள்ள மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் இவற்றைப் பற்றி கருத்து வெளியிடுவதைக் காண முடியவில்லை.

வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் அதிக அக்கறை செலுத்தினால் இளைஞர் யுவதிகளை போதை பொருள் கலாசாரத்திலிருந்து பாதுகாத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மை அடைய செய்ய முடியும் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
northern province chief minister include all embers waste wijayadasa

More Tamil News

Tamil News Group websites :