(rajasthan royals vs royal challengers bangalore ipl 2018)
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு முக்கியமான போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதன் முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் எந்த அணி தோல்வியடைந்தாலும், பிளே-ஆஃப் வாய்ப்பை முற்றுமுழுதாக இழந்து விடும்.
ஆனால் வெற்றிபெறும் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா? என்பதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன.
ஏனென்றால் இரண்டு அணிகளும் தலா 12 புள்ளிகளை பெற்று, 5ம் மற்றும் 6ம் இடங்களை பிடித்துள்ளன. அத்துடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி 3வது இடத்திலும், சிறந்த ஓட்டவிகித சராசரியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை அணி 4வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதில் இன்றைய தினம் பெங்களூர் அல்லது ராஜஸ்தான் அணிகளில் ஒரு அணி வெற்றிபெற்று 14 புள்ளிகளை பெற்றாலும், நாளை நடைபெறவுள்ள போட்டியில் மும்பை அணி தோல்வியடைய வேண்டும். இவ்வாறு தோல்வியடைந்தால் மாத்திரமே இந்த இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஒருவேளை சிறந்த ஓட்டவிகித சராசரியில் இருக்கும் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் சிறந்த ஓட்ட இடைவெளியில் வெற்றிபெற்று, மும்பை அணி அடுத்த போட்டியின் இறுதிக்கட்டத்தில் வெற்றிபெற்றால் பெங்களூர் அணிக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
ராஜஸ்தான் அணி ஏற்கனவே மந்தமான ஓட்டவிகித சராசரியில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாலும், மும்பை அணி கட்டாயமாக நாளைய போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி தோல்வியடைந்தால் மாத்திரமே ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதேவேளை இன்று நடைபெறவுள்ள ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கத்தா அணி ஒருவேளை தோல்வியடைந்து, பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் தங்களது வெற்றிகளை பெற்றுக்கொள்ளுமானால், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெளியேறும்.
இதனை தொடர்ந்து பிளே-ஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் இணைந்துள்ள பஞ்சாப் அணி முன்னேற வேண்டுமானால், பெங்களூர், மும்பை அணிகள் தோல்வியடைய வேண்டும் என்பதுடன், பஞ்சாப் அணி பாரிய ஓட்ட விகித சராசரியில் வெற்றிபெறவேண்டும். இவ்வாறு நடந்தால் மாத்திரமே பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆனால் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியின் வெற்றி போதுமானது. கொல்கத்தா அணி தோல்வியடைந்தாலும், அடுத்து உள்ள பெங்களூர், மும்பை அணிகள் தோல்வியடைந்தால் கொல்கத்தா அணியின் வாய்ப்பு நீடிக்கும்.
மும்பை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு நாளைய வெற்றியில் காத்திருக்கிறது. ஒருவேளை தோல்வியடைந்தால் தொடரிலிருந்து முற்றுமுழுதாக வெளியேறும்.
rajasthan royals vs royal challengers bangalore ipl 2018
- இத்தாலி ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சிவிடோலினா!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினார் சரபோவா!
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>