ஐந்தாண்டு திட்டத்திற்கு பொருந்தும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

0
423
non government organisation consider five years development

non government organisation consider five years development
ஐந்தாண்டு திட்டத்திற்கு பொருந்தும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் திலகராச் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையகப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, தேசிய நடவடிக்கைத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

லிந்துலையில் இடம்பெற்ற வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகப் பகுதிகளில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவித்தி அமைச்சு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் முன்வைத்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் முன்னெடுக்க வேண்டும்.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைச்சோடு இணைந்து பணியாற்றாது அமைச்சின் கொள்கைத் திட்டத்துக்கு முரணான வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
non government organisation consider five years development

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :