காதலியின் கணவனை 20 முறை கத்தியால் குத்திய காதலன்!

0
872
lover's husband 20-year-old knife maharastra

Lover’s husband 20-year-old knife maharastra

மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புஷாவல் பகுதியை சேர்ந்தவர் சமீர் மிர்ஸா (24), இவர் தானேவில் உள்ள ஓர் உணவு கூடத்தில் வேலைபார்த்து வந்தார், அப்போது அங்கு பணியாற்ற வந்த பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வுடன் பழக்கம் ஏற்பட்டு பிறகு அந்த பழக்கம் காதலாக மாறியது, இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பாத்திமாவுக்கு பெரோஸ் ஷேக் (29) வுடன் திருமணம் நடந்தது, இதனையடுத்து பாத்திமா அவரது கணவரின் ஊரான விரார் பகுதிக்கு சென்றுவிட்டார்,

பாத்திமாவுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அவரை மறக்க முடியவில்லை சமீர் மிர்ஸாவுக்கு, மிர்ஸா தொடர்ந்து பாத்திமாவுடம் காதலை தொடர்ந்தார், பாத்திமாவும் மிர்ஸாவை மறக்கமுடியாமல் மிர்ஸாவின் காதலை வரவேற்று கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் நெருங்கி பழகினார்கள், இந்நிலையில் தனது காதலியான பாத்திமாவுடன் சுதந்திரமாக பழக முடியவில்லை என்ற கோபத்தில் மிர்ஸா கத்தியுடன் விராரில் உள்ள பாத்திமா வீட்டிற்கு விரைந்து வந்து பெரோஸ் ஷேக் வரும் வரை வீட்டின் வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தான், பிறகு இதுவரை ஏதும் தெரியாத பெரோஸ் ஷேக் வீட்டின் அருகே வரும்போது மிர்ஸா அவரை நோக்கி வேகமாக ஓடி வந்து அவன் கையில் வைத்திருந்த கத்தியால் பெரோஸ் ஷேக்கை 20 முறை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்,

மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெரோஸ் ஷேக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது,

இதனையடுத்து பாத்திமாவின் காதலனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர், மேலும் பாத்திமாவின் பங்கு இதில் ஏதும் உள்ளதா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :