துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

0
1282
person injured gunmen motorcycle opened fire Jampata Kotahena

(police officer dead gun shooting horowpothana)
சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹொரவப்பொத்தனை, வாகொல்லாகட பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரவப்பொத்தனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹொரவப்பொத்தனை, இகலதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ​பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரவப்பொத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை