incident happened Murmarket railway station cut sickle RPF player
சென்னை மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 4 வழிப்பறிக் கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட போது குற்றவாளியை பிடிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை வீரரை கொள்ளையர்களில் ஒருவன் அரிவாளால் வெட்டினான், இச்சம்பவம் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடந்துள்ளது,
பயணிகளிடம் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி பணம் பொருட்களை கேட்டு மிரட்டியபோது பயணிகள் பயத்தில் அய்யோ, காப்பாத்துங்க என்று கூச்சலிட்டு சுற்றி இருக்கும் பயணிகள் மற்றும் ரோந்து பணியில் இருந்த (ஆர்.பி.எப்) என அனைவரின் கவனத்தையும் கொள்ளையர்கள் மீது கொண்டுவந்தார்கள், அப்போது ரோந்து பணியில் இருந்த (ஆர்.பி.எப்) யோகேஷ்குமார் துணிச்சலாக களம் இறங்கி கொள்ளையனை பிடிக்க முயற்சித்தபோது மற்றொரு கொள்ளையன் மறைத்து வைத்திருந்த அரிவாளாலை எடுத்து யோகேஷ்குமாரின் தலையில் வெட்டினான், அப்போதும் விடாமல் கொள்ளையர்களில் விஜய்(21) என்கின்ற ஒருவனை மடக்கி பிடித்தார், மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனர்,
பிடிப்பட்ட கொள்ளையனிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் மற்ற கூட்டாளி கொள்ளையர்களை பற்றி காவல்துறை அதிகாரி கொள்ளையன் விஜயிடம் விசாரித்து வருகின்றனர்,
மேலும் அரிவாள் வெட்டால் காயமடைந்த (ஆர்.பி.எப்) யோகேஷ்குமாரை போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
More Tamil News
- பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!
- அனைவரது ஆதரவுக்கும் நன்றி – ஆர்.ஜே பாலாஜி இன்று இரவு அறிவிப்பு!
- கடத்தலைத் தடுக்க நவீன சோதனைச்சாவடிகள் – தமிழகஅரசு!
- தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம்!
- கால் டாக்சி ஓட்டுநர்கள் – காவல் ஆணையரகத்தில் புகார்!
- காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!
- பெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே!
- காங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்!
- மதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
- கர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி!
- சாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்!