நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எம்.எல்.ஏ. பதவி இராஜினாமா – எடியூரப்பா

0
538
fails trust vote Yeddyurappa MLAI media reported plans resign

fails trust vote Yeddyurappa MLAI media reported plans resign

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் எடியூரப்பா தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடகாவுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ஆம் திகதி வெளியாகின. இதில் பா.ஜ.க. 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ் 78. ம.ஜ.த. 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. இதையடுத்து கடந்த 17ஆம் திகதி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் தந்தார் ஆளுநர். ஆனால் , காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த இந்திய உயர்நீதிமன்றம், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் ஒருவேளை சட்டசபை வராவிட்டாலும் கூட பா.ஜ.க. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது.
ஒருவேளை, பா.ஜ.க. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், எடியூரப்பா தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் ஏற்கனவே ஷிமோகா தொகுதி எம்.பி. பதவியை இராஜினாமா செய்துவிட்டார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியையும் அவர் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fails trust vote Yeddyurappa MLAI media reported plans resign

More Tamil News

 

  • TAMIL NEWS GROUP WEBSITES :