கே.ஜி.போபையா நியமனத்தை இரத்து செய்வதற்கு உயர் நீதிமன்றம் மறுப்பு

0
539
Court refused cancel appointment Karnataka Temporary Speaker

Court refused cancel appointment Karnataka Temporary Speaker

இந்திய கர்நாடக தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போபையா நியமனத்தை இரத்து செய்வதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ கே.ஜி போபையாவை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா நியமித்து உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ் முன்னணி தலைவர் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார்.

மரபுப்படி சட்டமன்ற மூத்த உறுப்பினரை தான் தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் ஆனால் பா.ஜ.க. இதில் மரபுகளை மீறியுள்ளதாக குற்றசாட்டியுள்ளார்.

மேலும், கே.ஜி.போபையாவை நீக்குமாறு வலியுறுத்தி காங்கிரஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

போபையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத் மலானி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளனர். கர்நாடக தற்காலிக சபாநாயகர் போதிய அனுபவம் இல்லாதவர்.

போபையாவுக்கு எதிராக உயர்நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற வாதத்தை கபில் சிபல் முன்வைத்தார். மேலும், மக்களளையில் இதுவரை நியமிக்கப்பட்ட சபாநாயகர்களின் பட்டியலையும் முன்வைத்தார்.

நெறிமுறை பின்பற்றப்பட்டிருந்தால், நாம் ஒருபோதும் ஆட்சேபனைகளுக்கு வரமாட்டோம் என வாதிட்டனர்.

இந்த வழக்கில் பா.ஜ.க. கட்சியின் சட்டத்தரணி முகுல் ரோத்தகி முதலில் வாதத்தை ஆரம்பித்த போது, போப்பையாவை இடைக்கால சபாநாயகராக நியமித்ததில் தவறில்லை. அவர் நியமனம் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றி செய்யப்பட்டது. காங்கிரஸ் இதை எதிர்ப்பதற்கு அவசியமே இல்லைஇ என்று குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குறைவான நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுத்தால் குழப்பத்தை ஏற்படுத்தும் சட்டப் பேரவை நிகழ்வுகளை 11 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதே சரியான தீர்வாக இருக்கும். சபாநாயகர் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்வதன் மூலம் வெளிப்படை தன்மை இருக்கும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் பேரவையில் நடக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Court refused cancel appointment Karnataka Temporary Speaker

More Tamil News

 

  • TAMIL NEWS GROUP WEBSITES :