இத்தாலி ஓபன் அரையிறுதியில் மரியா சரபோவா…

0
680
italy open tennis 2018 mariya sharapova

(italy open tennis 2018 mariya sharapova)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு ரஷ்ய வீராங்கனை மரியா சரபோவா தகுதிபெற்றுள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் சரபோவா, லட்வியாவைச் சேர்ந்த ஜெலீனா ஒஸ்டபென்கோவை எதிர்கொண்டார்.

மிகவும விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இருவரும் வெற்றிக்காக பலத்த போட்டியில் ஈடுபட்டனர்.

போட்டியின் முதல் செட்டில் இருவரும் 7-6 என விட்டுக்கொடுக்காமல் விளையாட, டை பிரேக்கர் வழங்கப்பட்டது. டை பிரேக்கரும் சமமான நிலையில் செல்ல இறுதிக்கட்டத்தில் 8-6 என ஒஸ்டபென்கோ வெற்றிபெற்றார்.

எனினும் அடுத்த செட்டில் சிறப்பாக ஆடிய சரபோவா 6-4 என வெற்றிபெற்று போட்டியை சமப்படுத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய சரபோவா 7-5 என மூன்றாவது செட்டையும் கைப்பற்றி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

சரபோவா இறுதிப்போட்டியில் ரோமானியாவின் சிமோனா ஹலீப்பை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>