{ 14 year jail businessman rape }
மலேசியா: தம்முடைய வீட்டில் பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வந்த இந்தோனிசியப் பெண்ணைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றஞ்சாட்டின் பேரில் வர்த்தகர் ஒருவருக்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு 5 பிரம்படித் தண்டனையும் விதித்து செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 44 வயதுடைய சுஃபியான் சுலைமான் என்ற அந்த வர்த்தகர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறி விட்டார் என்று செசன்ஸ் நீதிபதி டத்தின் எம்.குணசுந்தரி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகாலையில் தாமான் புக்கிட் செராசிலுள்ள வீட்டில் 19 வயதுடைய இந்தோனிசியப் பணிப்பெண்ணைக் கற்பழித்ததாக சுஃபியான் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
குற்றவியல் சட்டத்தின் 376 (1) பிரிவின் கீழ் 6 பிள்ளைகளுக்குத் தந்தையான சுஃபியான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சுஃபியானுக்கு செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Tags: 14 year jail businessman rape
<< RELATED MALAYSIA NEWS>>
*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!
*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?
*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!
*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!
*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..
*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!
*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்
*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!
*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!
* MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்