காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடத்தல்- சித்தராமையா

0
479
Congress MLA Siddaramaiah accused Anand Singh kidnapping BJP

Congress MLA Siddaramaiah accused Anand Singh kidnapping BJP

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கை பா.ஜ.க.வினர் கடத்தி சிறை வைத்துள்ளனர் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பா.ஜ.க. தேசிய தலைவருக்கு அரசமைப்பு சட்டம் தெரியாது. காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றிய மாநிலங்களில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவும் ஹிட்லரின் வழித்தோன்றல்கள். அவர்கள் ஜனநாயகத்தை கொலை செய்கின்றனர். பிரதமர் மோடி, அமித் ஷாவின் உத்தரவுபடியே ஆளுநர் வஜுபாய் வாலா செயல்படுகிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கை பா.ஜ.க.வினர் கடத்தி சிறை வைத்துள்ளனர். அமுலாக்கத் துறை, வருமான வரித் துறையினர் மூலம் அவரை மிரட்டியுள்ளனர்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமேயுள்ள பா.ஜ.க. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. 2 சுயேச்சைகளும் எங்கள் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Congress MLA Siddaramaiah accused Anand Singh kidnapping BJP

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :