100 கோடி ரூபா பேரம் பேசிய பா.ஜ.க.வின் ஓடியோவை வெளியிட்டது காங்கிரஸ்!

0
508
Congress MLA BJP give money minister Congress issued odio

Congress MLA BJP give money minister Congress issued odio
காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடாவுக்கு 100 கோடி இந்திய ரூபா பணம் மற்றும் அமைச்சர் பதவியைத் தருவதாக பேரம் பேசியுள்ள பா.ஜ.க.வின் ஓடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

அதன்படி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபா தருவதாக பா.ஜ.க. பேரம் பேசிவருவதாக ம.ஜ.த.வின் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடாவுக்கு 100 கோடி ரூபா பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ.க. சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவின் முழு ஒப்புதலோடுதான் தான் பேசுவதாக அந்த ஓடியோவில் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.

இன்று மாலை பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில், இந்த ஓடியோ வெளியாகியுள்ளமை கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Congress MLA BJP give money minister Congress issued odio

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :