இத்தாலி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்!

0
653
italian open tennis rafael nadal news Tamil

(italian open tennis rafael nadal news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற காலிறுதியில் நடால், இத்தாலி வீரர் பெபியோ பெக்கினியை எதிர்த்து ஆடினார்.

உலகின் முதற்தர வீரராக வலம் வரும் நடால், இந்த தடுமாற்றத்துடன் கூடிய வெற்றி ஒன்றையே பெற்றுக்கொண்டார்.

முதல் செட்டில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட நடாலுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார் பெபியோ பெக்கினி.  ஆரம்ப செட்டை 6-4 என கைப்பற்றி பெக்கினி முன்னிலைப்பெற்றார்.

எனினும் அடுத்த இரண்டு செட்களிலும் சுதாரித்துக்கொண்ட நடால், 6-1 மற்றும் 6-2 என வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேவேளை நடால் அரையிறுதிப்போட்டியில் சேர்பியா வீரர் நொவெக் ஜொகோவிச்சை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>