சாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்!

0
339
six hurricane warnings new storm warning Fishermen sea

six hurricane warnings new storm warning Fishermen sea

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் புயல் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகம், கர்நாடகா உட்பட 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,

“சாகர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஏமான் நாட்டின் துறைமுக நகரான ஏடன் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும், சுகுத்ரா தீவின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

இதனால் தமிழகம், கர்நாடகா, கேரளா, கோவா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

எனவே மீனவர்கள் ஏடன் வளைகுடா கடல் பகுதி மற்றும் தென்மேற்கு கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tamil News Group websites :