(facebooks mark zuckerberg appear european parliament speaker)
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், பேஸ்புக் நிறுவனமும் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆலோசனை நடத்தி உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
OUR GROUP SITES
facebooks mark zuckerberg appear european parliament speaker