காதலித்ததற்காக இளைஞரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த குடும்பம் : பாகிஸ்தானில் கொடூரம்

0
570
Pakistan father scooped eye son latest gossip
Photo source by :tamil.asianetnews.com

 (Pakistan father scooped eye son latest gossip)

” காதல் கண்ணை மறைத்து விடும் ” இது எல்லோருக்கும் தெரிந்த முதுமொழி .ஆனால் காதலே கண்ணை பறித்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது .அதாவது காதல் செய்ததால் ஒரு இளைஞரின் கண்ணை பெற்றோர் கரண்டியால் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது .

பாகிஸ்தானை சேர்ந்தவர் அப்துல் பகி. 22 வயதான இளைஞர்  ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அந்த பெண்ணையே தான் திருமணம் செய்ய விரும்புவதாக தன் குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அப்துல் பகின் தந்தையும் சகோதரர்களும் பகின் கண்களை ஸ்பூனை கொண்டு தோண்டி எடுத்துள்ளனர்

பகின் வழியால் துடித்த போது இது தான் உனக்கு கொடுபட்ட தண்டனை .இதுவே காதலிப்பவர்களுக்கு எல்லாம் தகுந்த பாடம் என கூறியுள்ளனர் .அவரை மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லவில்லை.

Pakistan father scooped eye son latest gossip 
Photo source by :tamil.asianetnews.com

அப்துல் பகின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரின் இன்னொரு சகோதரனை அழைத்து விஷயத்தை தெரிவித்திருக்கின்றனர். வெளியில் சென்றிருந்த அவர் வந்து பகியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருக்கிறார்.

மருத்துவமனை செல்லக்கூட பணம் இல்லாமல் இருந்த இந்த இருவருக்கும் அக்கம்பக்கத்தினர் தான் பணம் கொடுத்து உதவியிருக்கின்றனர்

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் அவர் உயிர் காப்பற்றப்பட்டாலும் அவரின் கண் பார்வையை திரும்ப பெற முடியவில்லை . இதனால் காவல் துறையினர் அவரின் தந்தையையும் இரண்டு சகோதரர்களையும் கைது செய்தனர் .

மேலும் தலைமறைவாகியிருக்கும் இரண்டு சகோதரர்களை தேடி வருகின்றனர்.

காதல் செய்ததற்காக பெற்றோர் பகினுக்கு அளித்த தண்டனை மிகவும் கொடூரமானது .இது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Pakistan father scooped eye son latest gossip