முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை

0
2441
army celebrities war victory mullivaikkal video

(army celebrities war victory mullivaikkal video)
இறுதி யுத்ததத்தில் பலியான தனது உறவுகளுக்கு அக வணக்கம் செலுத்திவிட்டு கண்ணீருடன் திரும்பிய உறவுகளுக்கு இராணுவத்தினர் குளிர்பானங்களையும் சிற்றூண்டிகளையும் வழங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொண்டமைக்காகவே முள்ளிவாய்க்கால் பிரதான பாதையில் கூடாரம் அமைத்து இந்த உணவுகளையும், பானங்கiயும் வழங்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தனது உறவுகளை இழந்து மிகவும் மன வருத்தத்துடன் வீடுகளுக்கு திரும்பும் உறவுகளுக்கு, இராணுவம் யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த உணவுகளை வழங்கியுள்ளமை, அந்த உறவுகளை மேலும் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் அவர்கள் தரும் உணவை வாங்கியவாறு மக்கள் பயணிப்பதை காணக் கூடியதாகவும் உள்ளது.

இது குறித்து இராணுவம் கருத்து தெரிவிக்கையில்,

எமக்கு விடுதலைப் புலிகள் வேறு, பொதுமக்கள் வேறு. நாங்கள் யுத்த வெற்றி கொண்டாட்டத்திற்காக இங்கு பானங்களை வழங்கவில்லை. இன்று யாழ்ப்பாணத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்று வரும் மக்கள் கலைப்படைந்து இருப்பார்கள். அதற்காகவே தாம் பானங்களை வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:army celebrities war victory mullivaikkal video,army celebrities war victory mullivaikkal video