தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்

0
722
Golden jewelry stolen CCTV camera

(Golden jewelry stolen CCTV camera)
நுவரெலியா நகரில் தங்க நகைக்கடை ஒன்றில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிச்சென்ற சந்தேக நபர் குறித்த கடையில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளார்.

சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து சந்தேக நபரை கைது செய்ய நுவரெலியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி காலை வேளையில் குறித்த கடைக்கு நகை வாங்குவது போல் சென்ற ஒருவர், கடை ஊழியர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதன் பின்னர் லாவகமான முறையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் தோடு ஆகிய நகைகளை திருடிச்சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் திருடிய நகைகளை போடும் காட்சிகளும் சிசிரிவி கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இதன்பின்னர் கடை உரிமையாளர் நகைகள் காணாமல் போயுள்ள சம்பவத்தை இனங்கண்டு சிசிரிவி கமராவில் பதிவாகிருந்த காட்சிகளை வைத்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதோடு, முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸார் சந்தேக நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Golden jewelry stolen CCTV camera