பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி சென்னையுடன் மோதல்

0
760
Delhi Daredevils vs Chennai Super Kings 52nd match IPL 2018

(Delhi Daredevils vs Chennai Super Kings 52nd match IPL 2018)

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

டெல்லி அணி இமு்முறையும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இந்த சீசனில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள முதல் அணியாகவும் டெல்லி அணி பதிவாகியுள்ளது.

இன்றைய போட்டியில் இரண்டு அணிகளுக்கும் கட்டயா வெற்றியை பெறத் தேவையில்லை என்ற போதிலும், சென்னை அணி தங்களது இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் இன்று வெற்றிபெற வேண்டும்.

புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளை சென்னை அணி பெற்றுள்ள நிலையில், கொல்கத்தா அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, கொல்கத்தா அணி ஒரு போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்புள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றியை தக்கவைக்கும் பட்சத்தில் இரண்டாவது இடத்தை உறுதிசெய்ய முடியும்.

டெல்லி அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் களமிறங்கும்.

இன்று களமிறங்கும் சென்னை அணியில் எவ்வித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை என்பதுடன், டெல்லி அணி தங்களது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஜேசன் ரோய்க்கு பதிலாக கொலின் மன்ரோவை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>