எதிர்வரும் 21ஆம் திகதி டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

0
507
demonstration condemning attack party executives

demonstration condemning attack party executives

கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து டி.டி.வி.தினகரன் அணி அமைப்பு செயலாளரும் கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது:-

எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.

இதனை கண்டித்து நாங்கள் வீதி மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்துள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை பொலிஸார் கைது செய்யாமல் எங்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக கூறியுள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

demonstration condemning attack party executives

More Tamil News

Tamil News Group websites :