Aeron Soosaipillai Rescue
கனடாவில் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை காப்பாற்றிய இலங்கையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பல்கலைக்கழக மாணவரான எய்ரோன் சூசைப் பிள்ளைக்கே இவ்வாறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறித்த சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எய்ரோன் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, நபரொருவர் ரயில் பாலத்திலிருந்து சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவரைக் கண்டதும் எய்ரோனுக்கு ஏதோ தவறாகப்பட்டது. உடனடியாக ரயிலை விட்டு இறங்கிய அவர் அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தவாறே அவரை நோக்கி வேகமாகச் சென்றுள்ளார்.
அவரிடம் பேச விரும்பாத அந்த மனிதர் அவரை திட்டிக் கொண்டே பாலத்தின் மையப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பாலத்தின் ஓரத்திற்கே சென்றுவிட்ட அந்த மனிதரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தார் எய்ரோன்.
“எனக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்று ஆஎரொன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலத்தின் கீழே பொலிசார் போக்குவரத்தை தடை செய்யத் தொடங்கியிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த மனிதன் நெஞ்சை நெகிழச்செய்யும் ஒரு காரியத்தைச் செய்தார்.
தன்னுடைய குழந்தையின் சப்பாத்தை எய்ரோன் இடம் கொடுத்த அந்த மனிதர் “எனக்காக ஒரு உதவி மட்டும் செய், என் மகனிடம் நான் அவனை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடு” என்றார்.
“என்னால் அதைச் செய்ய முடியாது, நீங்கள்தான் உங்கள் மகனிடம் அதைச் சொல்ல வேண்டும், அதுவும் உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு தினமும் நீங்கள் அப்படிச் சொல வேண்டும்” எனக்கூறியுள்ளார் எய்ரோன்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் அப்படியே நின்று விட்டார். உடனே அவரைப் பிடித்துக் கொண்ட எய்ரோன், அவரை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல இருவரும் அமர்ந்தார்கள்.
அந்த மனிதர் அழதுததுடன், எய்ரோனும் அதுவிட்டார், ரயில் பாதையைக் காட்டி “இனி நீங்கள் அங்கேசெல்லக்கூடாது, சரியா? இனிமேல் எல்லாம் நன்றாகத்தான் நடக்கும்” என்று கூற வாழ்வை முடிக்க வந்த மனிதர் புது வாழ்வைத் துவங்கும் முடிவுடன் புறப்பட்டார்.
ரயில்வே அதிகாரிகளும் பொலிசாரும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல எய்ரோன் தனது வேலையைப் பார்க்கப் புறப்பட்டார் .
எய்ரோனுக்கு பாதுகாப்பு விருதை அளித்து Mஎட்ரொலின்க்ஷ் கௌரவித்துள்ளது.