கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு – உயர்நீதிமன்றம்

0
187
High Court ordered Chief Minister Karnataka prove majority Eidhira

High Court ordered Chief Minister Karnataka prove majority Eidhira

இந்திய கர்நாடக மாநில சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எஸ். பாப்தே, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, “எடியூரப்பா பதவியேற்க தடையில்லை” என உத்தரவிட்டதையடுத்து, நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சிமைக்க அழைத்ததற்கு எதிரான வழக்கு விசாரணை இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கெ.சிக்ரி, அசோக் பூஷன் முன்பு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,

ஆளூநரிடன் ஆட்சியமைக்க கோரி எடியூரப்பா கொடுத்த கடிதம் தாக்கல் செய்த கடிதத்தில் ”ஆட்சியமைக்க தம்மை அழைத்தால் பெரும்பான்மையை நிரூபிப்பேன்” என்று குறிபிட்டுள்ளார்.

அப்போது, கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியமைக்க எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று பா.ஜ.க சட்டத்தரணி முகுள் ரோஹித்கி தெரிவித்துள்ளார்.
பின்னர், பெரும்பான்மை இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூறிய நிலையில், பா.ஜ.கவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஏன்? நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நல்லது என்று தோன்றுகிறது. நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா தயாரா?” என்று நீதிபதி ஏ.கெ.சிக்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் பின் ”நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தான் நல்லது” என்று காங்கிரஸ் சார்பில் சட்டத்தரணி சிக்ரி தெரிவித்தார். மேலும், ”கால தாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்” என காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங் தெரிவித்துள்ளார்.

அதோடு, ”நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்து எம்.எல்.ஏக்கள் எந்த அச்சமுமின்றி வாக்களிக்க வழி செய்ய வேண்டும்” என்றும் காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தாங்கள் பெரும்பான்மையை நிரூப்போம் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் வாதாடிய காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி கபில் சிபில், ”எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்’டும்” என்று கூறியுள்ளார்.

அதன்பின், கர்நாடகா சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்நாடக டி.ஜி.பி எடுக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court ordered Chief Minister Karnataka prove majority Eidhira

More Tamil News

Tamil News Group websites :