42 வயது பெண் குத்திக் கொலை

0
542
woman killed stabbing suspect arrested, woman killed stabbing suspect, woman killed stabbing, killed stabbing suspect arrested, stabbing suspect arrested, Tamil Swiss news, Swiss Tamil news

(woman killed stabbing suspect arrested)

Hoogvliet பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண்மணி Breda வில் புதன் மாலை குத்திக்கொல்லப்பட்டார். இந்தப் பெண் கொல்லப்பட்டு சில மணித்தியாலங்களிலேயே Breda ஐச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலையானது மாலை 6.30 மணியளவில் நடந்தது. பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரும் வரை அந்த சந்தேக நபர் கொலை நடந்த இடத்திலேயே அமைதியாக காத்து இருந்தார். கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கே நின்ற, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தார். அவரின் கூற்றுப்படி சுமார் 20 தடவைகள் சந்தேக நபர் அப்பெண்ணை குத்தியுள்ளார்.

“நான் பார்த்தபோது, ஒரு பெண் ஒரு காரில் இருந்து இறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன், உடனே ஒரு நபர் அதே காரில் இருந்து வெளியே வந்தார். உடனடியாக ஒரு கத்தியை வெளியே எடுத்தார். பின்னர் எல்லா இடங்களிலும் சரமாரியாக குத்தத் தொடங்கினார். குத்திய பின் கார் அருகே சென்று பொலிசாருக்காக காத்திருந்தார். பொலிசார் வந்த போது, அவரே மண்டியிட்டு சரணடைந்தார்.

அவசர சேவைகள் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் உட்பட பல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மற்றும் மருத்துவமனைக்கு விரைந்தழைத்து செல்லப்பட்டார். அங்கு சில மணிநேரங்களுக்கு பின்னர் இறந்தார்.

காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றியுள்ள தெருக்களை பொலிசார் மூடிவிட்டனர்.

 

woman killed stabbing suspect arrested, woman killed stabbing suspect, woman killed stabbing, killed stabbing suspect arrested, stabbing suspect arrested, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites