இன்றைய ராசி பலன் 17-05-2018

0
308
Today horoscope 17-05-2018

(Today horoscope 17-05-2018 )

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 3ம் திகதி, ரம்ஜான் 1ம் திகதி , 17.5.18 வியாழக்கிழமை, வளர் பிறை துவிதியை திதி மதியம் 2:05 வரை; அதன் பின் திரிதியை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 9:05 வரை; அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
* குளிகை : காலை 9:00 – 10:30 மணி

* சூலம் : தெற்கு
* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : அனுஷம்
* பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
புகழ் கூடும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். நாணயப் பாதிப்பு ஏற்படலாம். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் எண்ணம் உருவாகும்.

ரிஷப ராசி நேயர்களே !
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றங்கள் உறுதியாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் விரயம் ஏற்படும்.

மிதுனம் ராசி நேயர்களே !
அதிரடியான முடிவெடுத்து அருகிலுள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நாள். சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர சச்சரவு அகலும்.

கடக ராசி நேயர்களே !
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

சிம்ம ராசி நேயர்களே !
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

கன்னி ராசி நேயர்களே !
தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.\

துலாம் ராசி நேயர்களே !
உள்ளம் மகிழும் செய்தி உடன்பிறப்புகள் வழியில் வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுக்கள் முடிவாகலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணம் பலன் தரும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
உத்தியோக வாய்ப்புகள் கைகூடும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே !
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவி கேட்டுவருவர்.

மகர ராசி நேயர்களே !
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

கும்பம் ராசி நேயர்களே !
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தங்கம்,வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.

மீனம் ராசி நேயர்களே !
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today horoscope 17-05-2018