பிரதேச சபை உறுப்பினர்கள் 9 பேர் கைது

0
747
Weligama Polathumodera bridge issue 9 arrested

( Weligama Polathumodera bridge issue 9 arrested )
காலி மாத்தறை பிரதான வீதியில் அமைந்துள்ள வெலிகம, பொல்அதுமோதர பாலம் திறப்பின் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், வெலிகம பிரதேச சபையின் தலைவர் புஷ்பகுமார பெட்டகே உள்ளிட்ட 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று வெலிகம காவல்நிலையத்தில் முன்னிலையான வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வெலிகம பிரதேச சபையின் உபதலைவரும் உள்ளடங்கும் நிலையில், ஏனையவர்கள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணியின், பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி காலி மாத்தறை பிரதான வீதியில் அமைந்துள்ள வெலிகம பொல்அதுமோதர பாலம் திறப்பு வைபவத்தின் போது அங்கு அமைதியின்னை ஏற்பட்டது.

குறித்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்து வெலிகம பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பாலம் அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது , வெலிகம பிரதேச சபையின் தலைவருக்கும் அங்கு கடமையில் இருந்து பொலிஸாருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்தே ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :