சாவித்ரி மது குடிக்க ஜெமினி கணேசன் தான் காரணமா..? : கிளம்பியது புது சர்ச்சை..!

0
572
Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans role controversy,Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans role,Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans,Nadigaiyar Thilagam movie Gemini,Nadigaiyar Thilagam movie

(Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans role controversy)

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, ”நடிகையர் திலகம்” படத்தில் சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை “நடிகையர் திலகம்” என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இப் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், துல்கரின் கதாபாத்திரங்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதாவது, சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று காட்சிகளை வைத்துள்ளனர்.

அதன்பின்பு சாவித்ரி மதுவுக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடிப்பது மாதிரியும், இதனால் சர்க்கரை நோய்க்கு ஆளாகி கோமாவில் சிக்கி இறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.

இந்நிலையில், இப் படத்தை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பார்த்து பாராட்டி இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெமினி கணேசனை மோசமானவராக சித்தரித்து இருப்பதாக அவர்கள் சாடினர்.

அத்துடன், ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது.. :-

“சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டார்” என்று தெரிவித்து உள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் தற்போது சர்ச்சையாகப் பரவி வருகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

பிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..!

மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!

இடையசைவால் இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Nadigaiyar Thilagam movie Gemini Ganeshans role controversy

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி