மல்லுக்கட்டி புரண்ட மாணவிகள் : ஒருவர் வைத்தியசாலையில்

0
738
school girls fight dambulla

(school girls fight dambulla)
தம்புளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில், மாணவிகள் இருவர் மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளே இவ்வாறு ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான தாக்குதலுக்குள்ளான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த மாணவிகளில் ஒருவர் மற்றுமொரு மாணவியை தனது பாதணி மூலம் மித்தமையினாலே மேற்படி மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :