(Fraud fuel supply loss one crore rupees)
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்த தினத்தில், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட மோசடியினால் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைசசர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வழமையாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை முதல் விலை அதிகரிக்கும் நேரம் வரை எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் குறைந்த விலையில் பெற்ற எரிபொருளை கூடிய விலைக்கு விற்பதை தடுக்கவே இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவித்த நேரம் முதல் விலை அதிகரிக்கப்படும் நேரம் வரை எரிபொருள் பௌஸர்கள் 74 விநியோகிக்கப்பட்டதனால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி கொலன்னாவை முனையத்தில் இருந்து 52 பௌஸர்களும், முதுராஜவெல முனையத்தில் இருந்து 22 பௌஸர்களும், எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதென அறிவித்த பின்னரும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக முழு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணைகள் முடிந்த பின்னர் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் அறிக்கை சமர்பித்து, இதனால் ஏற்பட்ட நஷ்டப் பணத்தை இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் இருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
More Tamil News
- எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க
- அரச வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்; நோயாளர்கள் சிரமம்
- அரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- கிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி
- வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
- திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
- பாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்
- யாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை
- தமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது
- 4ம் எண் ராசியில்லை; துறவியாக்க முயற்சித்த தாய்; அம்மா வேண்டும் என கதறிய சிறுவன்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Fraud fuel supply loss one crore rupees