Bali warning Tourists
பாலியில் இரவு விடுதிகளையும், கடற்கரை களியாட்டங்களையும் தவிர்க்கும் படி அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகும் சாத்தியக்கூறுகள் அதிகமென இந்தோனேசிய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரபல இரவு விடுதிகளை தவிர்ப்பதுடன், கும்பலாக இருப்பதை தவிர்க்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ் எச்சரிக்கையை முக்கியமாக கவனத்தில் கொண்டு செயற்படும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.